இந்தியாவிற்கான விமான சேவை கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கும் என, நேபாள அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் புத்தி சாகர் லாமிச்சேன், இருநாடுகளுக்கு இடையே 9 மாதங்களுக்குப் பிறகு விமான சேவையை தொடங்குவதற்கான, இந்தியாவின் முயற்சிக்கு விரைவில் சாதகமான பதிலளிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, 10 நாட்களுக்குள் தேதி இறுதி செய்யப்பட்டு, இருநாடுகளுக்கு இடையேயான விமான சேவை தொடங்கப்படும் என, லாமிச்சேன் குறிப்பிட்டார்.