கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை, உலகின் மிக அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக கருதப்படுகிறது. கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை INS Ranvijay கப்பலில் இருந்து இன்று செலுத்தி கடற்படை பரிசோதித்துள்ளது.
300 கிலோ மீட்டர் தாக்குதல் இலக்கை கொண்ட அந்த ஏவுகணை, வங்காள விரிகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.