இந்த மாதத்திற்கான ஊரடங்குத் தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு டெல்லியில் கொரோனா பரவக்கூடிய மக்கள் கூடும் சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கடைக்காரர்கள், ஊழியர்கள் மக்கள் கூடும் சந்தைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல் , போன்ற நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. கடைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் என முறை வைத்துத் திறக்கும்படியும் வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.