வேளாண்துறைச் சீர்திருத்தங்களின் பயன்களை வருங்காலங்களில் தான் பார்க்கவும் உணரவும் முடியும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசி முதல் பிரயாக்ராஜ் வரை விரிவாக்கப்பட்ட ஆறுவழிச் சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், புதிய நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், சாலை விரிவாக்கத் திட்டங்களால் போக்குவரத்து நெரிசல் குறையும் எனத் தெரிவித்தார். உற்பத்திச் செலவைப் போல் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் எனக் கூறிய உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளதையும் மோடி நினைவுகூர்ந்தார்.