வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல் சின்னத்தை எதிர்கொள்ள கேரளாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மீட்புக் குழுவினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.