வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திராவிலும் கனமழை பெய்யுமென தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடக, கோவா, லட்சதீவுகள் கடல் பரப்பு வரை புயலின் பாதிப்பு இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.