கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி சென்றதை காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா பாராட்டியுள்ளார்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் ஆய்வு நடத்தியதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது. இந்நிலையில் டுவிட்டர் பதிவில் ஆனந்த் சர்மா , 3 நிறுவனங்களுக்கு பிரதமர் சென்றதன்மூலம் இந்திய விஞ்ஞானிகளுக்கும், அவர்களின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
காங்கிரசில் அமைப்பு ரீதியில் மாற்றம்கோரிய தலைவர்களில் ஆனந்த் சர்மாவும் ஒருவர் என்பதால், பிரதமரை அவர் பாராட்டியது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வார்த்தைகள் தவறாக இடம் மாறி பதிவிடப்பட்டு உள்ளதற்கு வருத்தம் கேட்டு கொள்வதாக இன்னொரு பதிவை வெளியிட்டுள்ளார்.