71 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குளிரான நவம்பர் மாதத்தை டெல்லி சந்தித்துள்ளது.
கடந்த 1949 நவம்பரில் டெல்லியில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலையாக 10.2 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. அதற்குப் பிறகு இப்போது தான் அதே வெப்பநிலை பதிவாகி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நவம்பரில் சராசரியாக 12.9 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகி வந்தது. இதற்கு முன்னர் 1938 ல் 9.6 டிகிரியும், 1931 ல் 9 டிகிரியும், 1930 ல் 8.9 டிகிரியும் பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை குறைந்ததால், டெல்லியில் கடந்த 3, 20, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் குளிர் அலை வீசியது.