போதைப்பொருள் வழக்கில் சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதி, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த 3ம் தேதி ராகிணி திவேதி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.