ஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோனை, பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் வகையில், ஜம்மு -காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.புரா செக்டாரின் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இரவு ஒரு ட்ரோன் வட்டமடித்தது. இதை கண்டுபிடித்து அதை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதனையடுத்து அந்த ட்ரோன் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. அந்த ட்ரோனை, பாகிஸ்தான் படையினரோ, பயங்கரவாதிகளோ அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.