சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் அமைத்தது தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ,பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் 45 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
45 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி சுரங்கத்தின் தாதா என்றழைக்கப்படும் அனுப் மாஜி எனப்படும் லாலாவின் வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் அரசியல் செல்வாக்குடன் அவர் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.