கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில், பாங்கோங் ஏரியில், இந்திய கடற்படை, மார்கோஸ் எனப்படும் தனது மரைன் கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.
அங்கு ஏற்கனவே விமானப்படையின் கருடா பிரிவு வீரர்களும், ராணுவத்தின் பாரா சிறப்பு படையினரும், பதற்றம் துவங்கிய நாளில் இருந்தே காவல்பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு முப்படையினரும் ஒன்றிணைந்து பணியாற்றும் நோக்கில் கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மிகவும் குளிரான காலநிலையில் பணியாற்றுவது எப்படி என்ற பயிற்சியும் மரைன் கமாண்டோக்களுக்கு அங்கு வழங்கப்பட உள்ளது. பாங்கோங் ஏரி ரோந்துக்காக புதிய படகுகளும் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.