சீன ராணுவ வீரர்கள் உயரமான பகுதிகளில் நிலவும் சூழலுக்கு பழகியவர்கள் அல்ல என்பதை, அவர்கள் வெளியிட்ட வீடியோ மூலமே சமூகவலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது.
சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோவில், 4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் சீன ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் நாள்தோறும் ஒரு மணி நேரம் பிரத்யேகமாக ஆக்சிஜனை சிலிண்டர்கள் மூலம் சுவாசிக்கிறார்கள் என்றும், இது அவர்களது அன்றாட வேலைத்திட்டத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவோ 4 ஆயிரத்து 419 மீட்டர் உயரத்தில் லடாக்கில் எஸ்பிஐ வங்கிக் கிளையை இயக்குகிறது. அதில் நாள்தோறும் உணவு இடைவேளைதான் விடப்படுகிறது.
இந்த இரண்டையும் ஒப்பிட்டு, சீன ராணுவ வீரர்கள் உயரமான பகுதிகளில் நிலவும் சூழலுக்கு பழகியவர்கள் அல்ல என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருவேளை சண்டை மூண்டால், உயரமான போர்க் களங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து வருவார்களா, அல்லது சண்டைக்கு நடுவே ஒரு மணி நேரம் ஏசி சேம்பருக்கு சென்று சுவாசித்து விட்டு வருவார்களா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.