ஊபர், ஓலா போன்ற கேப் (Cab) ஆபரேட்டர்கள், தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 1.5 மடங்கிற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தேவை குறைவாக இருக்கும் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவாகவே கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போன்று பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதம் கேப் நிறுவனங்களுக்கும் 80 சதவிகிதம் ஓட்டுநர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து அன்றி, வர்த்தக ரீதியான கட்டணத்திற்கும் இது பொருந்தும். மாநில அரசுகள் இது குறித்த அறிவிக்கையை வெளியிட்டால் மட்டுமே இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.