கொரோனா தடுப்பூசி உற்பத்தி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து புனே, அகமதாபாத், ஹைதரபாத்தில் இயங்கும் மருந்து நிறுவனங்களில் பிரதமர் மோடி நாளை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சங்கோதர் தொழிற்பேட்டையில் உள்ள ஜைதஸ் கெடிலா மருந்து நிறுவனத்தில் பிரதமர் முதலில் ஆய்வு செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து புனேவிலுள்ள சீரம் மருந்து நிறுவனத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகம் தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறார்.
பிற்பகலில் ஹைதராபாத் செல்லும் பிரதமர், பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிய இருக்கிறார்.