செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்திய ஐ.டி துறையின் தந்தை....சத்தமில்லாமல் சாதித்து மறைந்த எப்.சி கோலி யார்?

Nov 27, 2020 03:45:02 PM

டி.சி.எஸ். நிறுவனத்தின் நிறுவனரும் முதல் தலைமை செயல் அதிகாரியுமான ஃபாகிர் சந்த் கோலி (அ) எஃப்.சி கோலி (வயது 96) நேற்று காலமானார்.

இந்திய ஐ.டி. உலகின் தந்தை என்று அழைக்கப்படும் எஃப்.சி கோலி மார்ச் 19, 1924  ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ மற்றும் பி.எஸ்சி. பட்டப்படிப்பையும், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பி.எஸ்சி (ஹான்ஸ்) பட்டப்படிப்பையும் முடித்த பின்னர் 1950 இல் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

கனடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய பின்னர், 1951 இல் இந்தியாவுக்குத் திரும்பி அவர் டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார்.மும்பை முதல் புனே தடங்களிள் வரையிலான டாடா நிறுவன மின் சேவைப் பணிகளை கணினிமயமாக்கப்பட்டதில்  முக்கிய பங்கு இவருக்கு உண்டு. டாடா நிறுவனத்தின் கனவுத்திட்டமான தகவல் தொழில்நுட்பத்துறையில் அந்த  நிறுவனம் கால்பதிக்க கோலிதான் அடித்தளமிட்டார். 1969-ல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பொது மேலாளர் ஆன கோலி, பின்னர், 1974 ஆம் ஆண்டில், அந்த நிறுவனத்தின் இயக்குனராகவும், 1994 ஆம் ஆண்டு டி.சி.எஸ் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்தியவில் மென்பொருள் துறையில் ஃபாகிர் சந்த் கோலியின் பங்களிப்பிற்காக 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தனது 94 ஆவது வயது வரை தகவல் தொழில்நுட்பத்துறைக்காக பணியாற்றி,  இந்திய ஐ.டி துறையின் தந்தை  என்று  அழைக்கப்பட்ட எஃப்சி கோலி  வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

காக்னைசன்ட் முன்னாள் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி,  ''இந்திய தொழில்துறையின் அம்சத்தை மாற்றியமைக்கும் ஒரு தொழிற்துறையை வடிவமைத்து, உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடையவர். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையை உருவாக்கி லட்ச கணக்கானவர்களுக்கு உயர்தர வேலைகளை கிடைக்க அடித்தளமிட்டவர். இதற்காக, ஐ.டி நிறுவன ஊழியர்கள் அவரை நினைவு கூர கடமைப்பட்டுள்ளனர் '' என்று இரங்கலில் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில்  "எஃப்சி கோலி, தகவல் தொழில்நுட்ப உலகில் காட்டிய  தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார்.  அவரது மறைவு வேதனையளிப்பதாகவும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எனது வருத்தங்கள்''  என்று கூறியுள்ளார். 

class="twitter-tweet">

Shri FC Kohli Ji will be remembered for his pioneering contributions to the world of IT. He was at the forefront of institutionalising a culture of innovation and excellence in the tech industry. Pained by his demise. Condolences to his family and many admirers.

— Narendra Modi (@narendramodi) November 26, 2020


Advertisement
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு... நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
கட்டுப்பாட்டை இழந்த கடற்படைக்கு சொந்தமான படகு பயங்கரமாக மோதி விபத்து..
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
சபரிமலை கோவில் மேற்கூரையிலிருந்து நின்று பக்தர் எடுத்த விபரீத முடிவு
காரிலிருந்தவாறு ஆதிவாசி இளைஞரை சாலையில் இழுத்துச் சென்ற நபர்கள்...போலீசார் விசாரணை
வாகன தணிக்கையின் போது சிக்கிய ரூ.15 லட்சம் கள்ள நோட்டு - கைது செய்த போலீசார்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement