குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தீ விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.