இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் சரியான நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான மருத்துவச் சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஹர்ஷவர்தன், நாடு தழுவிய டிஜிட்டல் சுகாதார சூழலியலை உருவாக்குவதன் மூலம் சுகாதாரத்துறையை தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் டிஜிட்டல் மயமாக்கும் என்றார். இதன் மூலம், நோயாளிகள், மருத்துவர்கள், சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் முறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.