புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
3வது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் கண்காட்சி கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர், கடந்த 6 ஆண்டுகளில் அந்த துறையில் இரண்டரை மடங்கு தனது செயல்திறனை இந்தியா அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2000 கோடி டாலர் மதிப்பில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மோடி கூறினார்.
இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 136 கிகா வாட்ஸ் அதாவது 36 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தற்போது நடைபெறுவதாக பிரதமர் தெரிவித்தார்.