புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கிப் படையெடுத்த விவசாயிகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
பிற மாநில விவசாயிகள் டெல்லிக்கு வருவதைத் தடுக்க அரியானா, உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்களில் அணிவகுத்து வந்த விவசாயிகளை அரியானா காவல்துறையினர் அம்பாலாவில் தடுத்து நிறுத்தினர்.
தடுப்புகளைத் தூக்கி எறிந்த விவசாயிகளைக் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர்.