வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நள்ளிரவில் கரையைக் கடந்த நிலையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மழைநீர் தேங்கியது.
பள்ளமான பகுதிகளிலும் சாலையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது.
நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைவெள்ளம் சூழ்ந்த நிலையில் எல்லையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.