சீனாவின் AliSuppliers, AliExpress, Alipay Cashier, CamCard and DingTalk உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்ட 59 செயலிகளின் நிழல் செயலிகளாக இவை இருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் இந்த செயலிகள் கேடு விளைவிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. பப்ஜி ,டிக்டாக் உள்பட இதுவரை மொத்தம் 250 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.