குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது துணைவியாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் குடியரசுத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு தரிசனம் செய்த குடியரசுத் தலைவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக, திருப்பதி செல்ல விமானம் மூலம் சென்னை வந்த குடியரசுத்தலைவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.