வந்தே பாரத் திட்டத்தின் மூலம், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக கடந்த மே மாதம் ஆறாம் தேதி, மத்திய அரசால் துவக்கப்பட்ட வந்தே பாரத் திட்டம் தான் உலகளவில் நடைபெற்ற மிகப்பெரும் மீட்பு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஞாயிறு அன்று மட்டும் 44 விமானங்கள் மூலம் 6,951 பேர் தாயகம் திரும்பியதாக அவர் பதிவிட்டுள்ளார்.