ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லாலின் மனைவி சுசிலா தேவி கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தலைநகர் புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுசீலா தேவி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணேஷி லால் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ஆழ்ந்த வருத்தத்துடனும், கனமான இதயத்துடனும், மாநில முதல் பெண்மணி திருமதி சுசீலா தேவி காலமானார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் மனைவியின் மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாயக் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.