மேற்கு வங்க மாநிலத்தில் லாரிகளை ஏற்றிச் சென்ற சிறிய கப்பல் கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகி உள்ளனர்.
மால்டா மாவட்டத்தில் சாகேப்கன்ஜ் என்ற இடத்தில் இருந்து மனிக்சாக் என்ற இடத்திற்கு கங்கை ஆற்றின் வழியாக சிறிய கப்பல் ஒன்று லாரிகளை ஏற்றிச் சென்றது. அப்போது நிலைதடுமாறிய அந்தக் கப்பல் திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கப்பலில் இருந்த சில லாரிகள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. இதில் 10 பேர் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆற்றில் மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.