50 சதவிகித தள்ளுபடி விலையில், ஆக்ஸ்போர்டு -ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி, வரும் ஜனவரி பிப்ரவரி வாக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இந்தியாவுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதியை வழங்கினால் இது சாத்தியம் என கூறப்படுகிறது.
இந்த தடுப்பூசி முதலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்கள மருத்துவப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் என 2.7 கோடி பேருக்கு போடப்படும் எனவும் சொல்லப்படுகிறது.
நபர் ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட 500 முதல் 600 ரூபாய் வரை என்ற தள்ளுபடி விலையில் மருந்து வழங்கப்படும் எனவும் சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்தி தடுப்பூசிகளை பெற வாய்ப்பு உள்ளது.