ஜம்மு காஷ்மீரில் பீர்பாஞ்சல் மலைத்தொடரில் கடுங்குளிரால் தரையெங்கும் பனி உறைந்துள்ளதால் முகல் சாலை மூடப்பட்டுள்ளது.
நாட்டின் வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கும் கீழாக உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பீர்பாஞ்சல் மலைத்தொடர்ப் பகுதியில் கடுங்குளிர் நிலவுவதுடன், அதிகப் பனிப்பொழிவும் உள்ளது.
இதனால் தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியன பனி உறைந்து வெண்ணிறமாகக் காட்சி அளிக்கிறது. கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் செல்ல முடியாததால் முகல் சாலை மூடப்பட்டுள்ளது.