HDFC வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளில் தொடர்ந்து கோளாறு ஏற்படுவது ஏன் என ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பட்ட கோளாறால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பிரச்சனை இன்னும் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. UPI பேமென்ட் தளம் முடங்கியதுடன், ஏடிஎம் மற்றும் கார்டு சேவைகளும் பல மணி நேரம் முடங்கின.
வங்கியின் டேட்டா சென்டரில் ஏற்பட்ட இந்த குளறுபடி குறித்து விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகவும், அத்துடன் ரிசர்வ் வங்கி குழுவினர் இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.