இரண்டாயிரத்துக்கும் அதிகமான சேவைகளை வழங்கி வரும் உமங்க் செயலியின் இணைய மாநாடு நாளை நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், செயலியின் பங்குதாரர்களாக உள்ள சுமார் 20 துறைகளின் ஆலோசனைகள் மற்றும் பின்னூட்டங்கள் பெறப்பட உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நேரடி பலன் பரிவர்த்தனை துறைகள், தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம், சுகாதாரம், கல்வி, வேளாண், கால்நடை பராமரிப்பு அமைச்சகங்கள், பணியாளர் தேர்வாணையம் ஆகியவை உமங்கின் முக்கிய பங்குதாரர்கள் ஆவார்கள்.