மத்திய பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பகங்களில் உள்ள பசுக்களின் நலனுக்காக பொதுமக்களிடமிருந்து சிறிய தொகையினை வரியாக வசூலிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
அகர்மால்வா மாவட்டம் சலாரியாவில் பசு பாதுகாப்பகத்தில் நடைபெற்ற கோபாஸ்டமியில் பங்கேற்று பேசிய அவர் இதனைத்தெரிவித்தார்.
மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாட்டுப் பால் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அதே போல் மாநிலத்தில் உள்ள 7 முதல் 8 லட்சம் வரையிலான கால்நடைகளுக்காக 2ஆயிரம் புதிய பசு பாதுகாப்பகங்களை உருவாக்க இருப்பதாகவும் கூறினார்.