கொரோனா தடுப்புக்கான ஆக்ஸ்போர்ட் மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50% விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் அவசர சிகிச்சைக்கு மருந்தை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதலை அரசு கோரியுள்ளது. இந்நிலையில் , சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.