பீகார் தேர்தலுக்குப் பின் முதல் சட்டமன்றக் கூட்டம் இன்று கூடுகிறது.
5 நாட்களுக்கு நடைபெறும் இத்தொடரில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.வான நந்து கிஷோர் யாதவ் சபாநாயகராக பொறுப்பேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக கடும் விமர்சனங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ள எதிர்க்கட்சியினர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர்குலைந்திருப்பதாகவும் வேலைவாய்ப்பில்லாத நிலைமை அதிகளவில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்