ரிசர்வ் வங்கியின் டுவிட்டரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 10லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இது ஒரு புதிய மைல்கல் என்று அதன் ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த சாதனை அமைந்துள்ளது.