நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 45,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 90 லட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 501 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்புடன் 4 லட்சத்து 40ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 85 லட்சத்து 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 17 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.