சமூக வலைதளங்களில் சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கக் கூடிய அவசர சட்டத்திற்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தனிநபரை சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள், அவமானப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
கேரள அரசின் இந்த அவசரச் சட்டம், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.