மத்தியபிரதேசத்தில் சாலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை, போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்.
தேவாஸ் பகுதியில், பெண்களிடம் அத்துமீறியதாக இரண்டு இளைஞர்களை பிடித்த போலீசார், சாலையிலேயே அவர்களை தோப்புக் கரணம் போட வைத்தனர். தொடர்ந்து, இருவரது கைகளையும் கட்டிய போலீசார், பிவிசி பைப்களை கொண்டு சரமாரியாக தாக்கியவாறே, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.