அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து மலிவாக கிடைக்க நிதித் திரட்டுவதற்கு ஜி 20 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
மருந்து விநியோகம் தொடர்பான திட்டங்களும் வகுக்கப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார பலம் படைத்த இருபது நாடுகளின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சுற்றுச் சூழல் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இன்று கொரோனாவுக்கு எதிராக நிதித் திரட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. கொரோனா தடுப்புசி கிடைக்காமல் எந்த ஏழை நாடும் விடுபட்டு விடக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.