உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பெண் மருத்துவர் ஒருவர், அவரது குழந்தைகள் பக்கத்து அறையில் உள்ள போது மர்மநபரால் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேபிள் டிவி டெக்னீஷியன் என்று கூறி மருத்துவர் நிஷா சிங்கலின் வீட்டிற்குள் நுழைந்த ஒருவன், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் தாக்கியதில் காயமடைந்த அவரது 2 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.