மகாராஷ்டிராவின் சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று 9 மாதங்களாக நடந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நயன்கங்கா சரணாலயத்தில் உள்ள புலி ஒன்றுக்கு வனத்துறையினர் வாக்கர் என்று பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் வாக்கரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டிருந்தது.
அப்போது மகராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட வாக்கர் 9 மாதங்களாக நடந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து தெலங்கானா வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனக்கு ஏற்ற இணையைத் தேடி வாக்கர் வந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட ஒரு புலியின் மிக நீண்ட நடைப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது