டெல்லியில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையால் மகாராஷ்ட்ரா அரசு டெல்லி-மும்பை இடையிலான விமானங்கள் மற்றும் ரயில்களைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருந்து வந்த மகாராஷ்ட்ரா கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் பரவிய இரண்டாம் அலை தொற்றால் மகாராஷ்ட்ராவிலும் அது பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தினசரி 45 விமானங்கள் டெல்லி-மும்பையை இணைக்கின்றன. நூற்றுக்கணக்கான ரயில்களும் பல ஆயிரம் பயணிகளை டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்து வருகின்றன.