உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு, பெரு நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கிக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தனியார் வங்கிகளுக்கான நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட, பி.கே.மொஹந்தி தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், தனியர் வங்கி நிறுவனர்கள் அதிகபட்சமாக 15 சதவீத வரை பங்குகள் வைத்திருக்லாம், 15 ஆண்டுகளில் அதனை 26 சதவீதமாக உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வகை சேவைகளை வழங்கும் பெரும் வங்கியாக இருந்தால் முதலீட்டுத் தொகை ஆயிரம் கோடி ரூபாயாகவும், சிறிய வங்கியாக இருந்தால் முதலீட்டை 300 கோடி ரூபாயாகவும் உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.