முக்கியத் தலைவர்களைக் கொல்ல கொரோனா வைரஸ் கொண்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச குற்றத் தடுப்பு அமைப்பான இன்டர்போல் வெளியிட்டுள்ள வழிகாட்டலில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு பிரிவினர், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில அரசியல் தலைவர்களைக் கொல்ல கொரோனா வைரஸ் பூசிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.