கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முக்கிய பிரமுகர்களுக்காக, சிறப்பு பிரிவு எதையும் உருவாக்கக் கூடாது என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரது உயிரும் முக்கியம் என்றார். முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிப்பதில், முன்னுரிமை அளித்தால் அவர்கள் தைரியமாக சேவையை செய்வர் என கூறினார்.
தடுப்பூசி விநியோகத்தில் அரசியில் தலையீடு இருக்கக் கூடாது எனவும், அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.