இந்திய பெருங்கடலில் உலவும் சீன நீர்மூழ்கிகளுக்கு எமனாக இருக்கும் P-8 ரக போர் விமானத்தின் 9 ஆவது விமானம், போயிங் நிறுவனத்திடம் இருந்து கோவா வந்து சேர்ந்துள்ளது.
நீருக்கடியில் செல்லும் எதிரி நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் இந்த விமானத்திற்கு உண்டு. இது போன்ற 8 விமானங்கள் ஏற்கனவே பெறப்பட்டு அவை கடற்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 4 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டதில் முதலாவதாக இந்த விமானம் வந்துள்ளது.
மேலும் 6 விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் இன்னும் சில ஆண்டுகளில் மொத்தம் 22 P-8 விமானங்களை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவும் எல்லைப்பகுதியிலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த விமானம் உதவியது.