இந்தியாவில் 2021ம் ஆண்டு ஏப்ரலுக்குள் நாட்டு மக்களுக்கு ஆக்ஸ்போர்டு கொரோனா மருந்து கிடைக்கும் என்றும், 2 டோஸ் மருந்து அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் அதை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் இந்திய தலைமை செயலதிகாரி அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகை ஒன்றின் மாநாட்டில் பேசிய அவர், மருந்து விநியோகத்தில் முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு 2021 பிப்ரவரி மாதத்துக்குள் மருந்து கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
2024ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் மருந்து அளிக்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாகவும் பூனாவல்லா குறிப்பிட்டார். முதியோருக்கு மருந்து கொடுக்கப்பட்டு, அதில் எந்தவித பிரச்னையும் இல்லையென உறுதி செய்யப்பட்டபின் குழந்தைகளுக்கு கொடுப்பது குறித்து பரிந்துரை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.