அபாயகரமான அளவில் கொரோனா தொற்று பரவுவதால், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 57 மணி நேர தொடர் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9 மணி முதல் வரும் 23 ம் தேதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ரவி குமார் குப்தா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்து விற்பனை கடைகள் மட்டுமே திறந்து செயல்பட அனுமதி வழங்கப்படும். அத்துடன் அகமதாபாத் நகரில் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத துவக்கத்தில் இருந்து அகமதாபாத் நகரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.