இந்திய எல்லைக்குள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊடுருவிய சீனா, பூட்டான் எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு சீனர்களை குடியேற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டோக்லாமில் இருநாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் பதற்றமான பகுதியை அடுத்து, இந்த கிராமம் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அரசு அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஊடகத்தில் இந்த கிராமத்தின் படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. முதலில் இது டோக்லாம் பகுதி என்று கூறப்பட்டு பின்னர் அதன் சரியான இடம் பூட்டான் என்று தெரிவிக்கப்பட்டது.