தனியார் ரயில்களை இயக்குவதற்காக பெறப்பட்ட 120 விண்ணப்பங்களில் 102 தகுதியானவை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்தில் பயணிகளுக்கு வசதியை மேம்படுத்தவும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
150 வழித்தடங்களிலும் இருவழி ரயில் போக்குவரத்துக்கு தனியாருக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 151 அதி நவீன ரயில்களையும் புதிதாக இணைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.