ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தெரிந்ததும் மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை, அரசு வழிமுறைகளை பின்பற்றவும் சதானந்த கவுடா வலியுறுத்தியுள்ளார்.